Wednesday, 22 October 2014

Welcomes To Sri Kailasha Ashramam

Welcomes To Sri Kailasha Ashramam

ஸ்ரீ சதாசிவ பிரம்மம் 350 ஆண்டுகட்கு முன்பு மதுரை மாநகரிலே சோமநாதயோகி அவர்களுக்கும், பார்வதி தேவி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். இயற்பெயர் சிவராமகிருஷ்ணன்.


இள வயதிலேயே இவருக்கு திருமணம் நடந்தது. திருவிசை நல்லூர் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாளிடத்தில் சாஸ்திரங்களை கற்றார். சாஸ்திரங்களை கற்கும் போதே அவற்றில் அனுபூதி பெற்றார். இவரின் ஞானத்தை அறிந்த ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள் இவரை பரமசிவேந்திராள் என்ற குருவிடம் கற்க ஏற்பாடு செயதார்.
மிக விரைவில் சாஸ்திரங்களை கற்று மைசூர் சமஸ்தான வித்வானாக அமர்ந்தார். அப்போது தன்னுடைய திறமையால் நற்பெயர் பெற்றார்
இக்காலகட்டத்தில் சிவராமகிருஷ்ணனை சந்திதித்த அவருடைய குருநாதர் ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார். அந்த நிமிடத்திலிருந்தே இனி பேசுவதில்லை என்று தீர்மானித்து மௌனியானார். குருவும் அவருக்கு சந்நியாசம் கொடுத்து சதாசிவம் என்ற பெயரையும் சூட்டி உனக்கு பிரியமான இடத்திற்கு சென்று நீ தவம் இயற்றலாம் எனச் சொல்லிவிட்டார்


sadashiva temple nerur



சதாசிவம் புறப்பட்டு நெரூர் வந்து சேர்ந்தார். தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக நெரூர் காவிரியாற்றங்கரை விளங்குகிறது. இங்கு காவிரி வடக்கிருந்து தெற்கு நோக்கி தட்சினவாகினியாக பாய்வதும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
சதாசிவம் அவர்கள் இங்கிருந்து மந்திர யோகம், பரிச யோகம், பாவ யோகம், அபாவ யோகம், மகா யோகம் என்ற ஐந்து யோகங்களையும் அனுஷ்டிக்க ஆரம்பித்தார். சுவாசத்தோடு மந்திரத்தைச் சேர்த்துப் பழகிக் கொள்வது பரிசயோகம். இது குண்டலினி யோகம் என்றும் அழைக்கப்பெறும். உலகில் உள்ள பொருள்கள் கற்பனையில் நாம் மனத்தால் நினைக்கும் பொருள்கள் அனைத்தையும் கடவுள் என்று பாவனை செய்து விடுவது பாவயோகமாகும். இதனால் எந்த பொருளின் மீதும் ஆசையும், துவேஷமும் ஏற்படாது. இதுவே பாவ யோகத்தின் பலனாகும். இதற்கடுத்த நிலையிலிருப்பது அபாவகயோகம். உலகில் காணும் அனைத்தும் கடவுளே என்ற பாவனையையும் விட்டு விட்டு தானை கடவுள் என்றும், தனக்கு அந்நியமாக ஒரு கடவுள் இல்லை என்றும் எண்ணுவதே அபாவகயோகமாம். மகாயோகம் என்பது தானே கடவுள் என்ற அந்த கடைசி எண்ணத்தையும் விட்டு விடுவதாகும். ஜப்பானின் ஜென் ஞானிகள் சொல்வதைப்போல் சூனியத்தையும் விட்டுவிடுவது. மனதில் எண்ணங்களில்லை என்று உணர்வதே ஒரு எண்ணமாம். ஆகவே அதையும் விட்டுவிடுவதே மகாயோகமாகும். இந்த ஐந்து யோகங்களும் பூர்த்தியடைந்த பிறகு சதாசிவபிரமேந்திரர் பல யோகசித்திகள் புரிந்துள்ளார்.
பின் இந்தியாவெங்கும் சென்றார். sகாடு, நாடு நகரமென சுற்றித் திரிந்த பிரமேந்திரருக்கு புதுக்கோட்டை மஹாராஜா, மைசூர் மஹாராஜா, தஞ்சாவூர் மஹாராஜா ஆகியோர் அனுக்க சீடர்களாய் விளங்கினர். கி.பி 1738 ஆம் வருஷம் புதுக்கோட்டை ராஜாவுக்கு உபதேசம் செய்ததாக சரித்திர குறிப்புள்ளது. தான் ஜீவசமாதியடையும் காலம் வந்ததை உணர்ந்த பிரமேந்திரர் மீண்டும் நெரூர் வந்தார். தன் சீடர்களான புதுக்கோட்டை மகாராஜா, மைசூர் மஹாராஜா, தஞ்சாவூர் மஹாராஜா ஆகியோரை மானசீகமாய் அழைத்தார். அவர்களும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம், குகையமையுங்கள். நான் அதனுள் உட்கார்ந்ததும் சாமக்கியைகளால் மறைத்து விடுங்கள் எனறார். அவர்கள் அழுதனர். ஆவர்களுக்கு ஆறுதல் கூறினார். பிரமேந்திரர் சொன்னதுபோல் குகை அமைக்கப்பட்டது. உட்காரும் போது போடக்கூடிய சாமான்களையெல்லாம் சதாசிவ பிரமம் அவர்களுக்கு அறிவித்தார். "விபூதி, உப்பு, மஞ்சள் தூள், செங்கற்பொடி போட்டு மூடிவிடுங்கள். ஒன்பதாம் நாள் சிரசின் மேல் வில்வ விருட்சம் தோன்றும். பன்னிரெண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வரும். அதை 12 அடிக்கு கிழபுறம் வைத்து கோயில் கட்டுங்கள். வில்வவிருட்சத்திற்கு மறைப்பு பண்ண வேண்டாம். மேடை போட்டு விடுங்கள் என்று கூறியருளினார். குறிப்பிட்ட நாளில் சதாசிவ பிரமம் குகையில் அமர்ந்து விட்டார். பக்தர்கள் திரளாக கூடினர். சுவாமிகள் உள்ளே உட்கார்ந்தவுடனே எல்லாச் சாமான்களையும் போட்டு மூடினார்கள். ஒன்பதாம் நாள் வில்வமரம் தோன்றியது.




sadashiva temple nerur


பன்னிரெண்டாம் நாள் அவர் சொன்படியே காசியிலிருந்து ஒரு பிரமச்சாரி சிவலிங்கம் கொண்டுவந்தார். சுவாமிகளின் ஜீவசமாதிக்கு 12 அடிக்கு கிழக்குபுறம் காசி லிங்கத்தை வைத்து கோயில் கட்டப்பட்டுள்ளது. சதாசிவ பிரம்மத்தின் சமாதியிலிருந்து வளர்ந்த வில்வமரம் பட்டுபோன நிலையில் உள்ளது. ஆனால் சமீப நாட்களில் ஒரு அதிசயமாக பட்டுபோன வில்வமரத்தின் பக்கவாட்டிலிருந்து கிளை துளிர் விட்டு வளர்ந்துள்ளது. இது தற்போது இங்கு வரும் பக்தர்களால் வியப்புடன் பார்க்கபடுகிறது. இச்ஜீவசமாதி கோயில புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பராமரிப்பில் உள்ளது.

Contact To Sri Kailasha Ashramam

Sri Biramanandha swamy,
Sri Kailasha Ashramam,
Nerur,
Karur (D.t)
Tamilnadu (State)
India
Phone - 04324-282222


Mr: JKK. Munirajahh,
Head, Swamy Sadasivanandha Trust,
Sri Kailasha Ashramam
Mobile: 9944611111


Mr: R.S. Raju,
secretary, Swamy Sadasivanandha Trust,
Sri Kailasha Ashramam.
Mobile: 9842761501


Mr: S. Lakshmanan ,
Cashier, Swamy Sadasivanandha Trust,
Sri Kailasha Ashramam.
Mobile: 9443157091
Email: lakshmanan@srikailashaashramam.org


Mr: R.Jayaraman,
cell: 9842036767


If you want to Donate
Our Bank Account Below
Bank: Karur Vysya Bank Ltd
Karur Main Branch
Account name: Swamy Sadasivanandha Trust
Account Number: 1142 155 3026

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment