Wednesday, 22 October 2014

சதாசிவபிரமேந்திரர்

இள வயதிலேயே சதாசிவம் அவர்கள்க்கு திருமணம் நடந்தது. திருவிசை நல்லூர் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாளிடத்தில் சாஸ்திரங்களை கற்றார். சாஸ்திரங்களை கற்கும் போதே அவற்றில் அனுபூதி பெற்றார். இவரின் ஞானத்தை அறிந்த ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள் இவரை பரமசிவேந்திராள் என்ற குருவிடம் கற்க ஏற்பாடு செயதார்.
மிக விரைவில் சாஸ்திரங்களை கற்று மைசூர் சமஸ்தான வித்வானாக அமர்ந்தார். அப்போது தன்னுடைய திறமையால் நற்பெயர் பெற்றார்
இக்காலகட்டத்தில் சிவராமகிருஷ்ணனை சந்திதித்த அவருடைய குருநாதர் ஊரார் வாயெல்லாம் அடக்க... கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார். அந்த நிமிடத்திலிருந்தே இனி பேசுவதில்லை என்று தீர்மானித்து மௌனியானார். குருவும் அவருக்கு சந்நியாசம் கொடுத்து சதாசிவம் என்ற பெயரையும் சூட்டி உனக்கு பிரியமான இடத்திற்கு சென்று நீ தவம் இயற்றலாம் எனச் சொல்லிவிட்டார்
sadashiva temple nerur
சதாசிவம் புறப்பட்டு நெரூர் வந்து சேர்ந்தார். தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக நெரூர் காவிரியாற்றங்கரை விளங்குகிறது. இங்கு காவிரி வடக்கிருந்து தெற்கு நோக்கி தட்சினவாகினியாக பாய்வதும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
சதாசிவம் அவர்கள் இங்கிருந்து மந்திர யோகம், பரிச யோகம், பாவ யோகம், அபாவ யோகம், மகா யோகம் என்ற ஐந்து யோகங்களையும் அனுஷ்டிக்க ஆரம்பித்தார். சுவாசத்தோடு மந்திரத்தைச் சேர்த்துப் பழகிக் கொள்வது பரிசயோகம். இது குண்டலினி யோகம் என்றும் அழைக்கப்பெறும். உலகில் உள்ள பொருள்கள் கற்பனையில் நாம் மனத்தால் நினைக்கும் பொருள்கள் அனைத்தையும் கடவுள் என்று பாவனை செய்து விடுவது பாவயோகமாகும். இதனால் எந்த பொருளின் மீதும் ஆசையும், துவேஷமும் ஏற்படாது. இதுவே பாவ யோகத்தின் பலனாகும். இதற்கடுத்த நிலையிலிருப்பது அபாவகயோகம். உலகில் காணும் அனைத்தும் கடவுளே என்ற பாவனையையும் விட்டு விட்டு தானை கடவுள் என்றும், தனக்கு அந்நியமாக ஒரு கடவுள் இல்லை என்றும் எண்ணுவதே அபாவகயோகமாம். மகாயோகம் என்பது தானே கடவுள் என்ற அந்த கடைசி எண்ணத்தையும் விட்டு விடுவதாகும். ஜப்பானின் ஜென் ஞானிகள் சொல்வதைப்போல் சூனியத்தையும் விட்டுவிடுவது. மனதில் எண்ணங்களில்லை என்று உணர்வதே ஒரு எண்ணமாம். ஆகவே அதையும் விட்டுவிடுவதே மகாயோகமாகும். இந்த ஐந்து யோகங்களும் பூர்த்தியடைந்த பிறகு சதாசிவபிரமேந்திரர் பல யோகசித்திகள் புரிந்துள்ளார்.

No comments:

Post a Comment