Wednesday 19 November 2014

ஆஞ்சேநேயர் ஸ்லோகம்

ஆஞ்சேநேயர் ஸ்லோகம்
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத் ||
...
விளக்கம் :-
புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு வாக்குவன்மை இவையனைத்தையும் ஆஞ்சேநேயர் தன்னை வழிபடுபவர்களுக்கு அருள்கின்றார்.
சாதரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்ககொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும் அவற்றை பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லாகுனங்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார், ஸ்ரீ ராமதூதன் , ஆஞ்சேநேயர்.

No comments:

Post a Comment